ஸ்ரீ ராஜகோபால த்யானம்.
கோபாலம் த்விபுஜம் க்ருஷ்ணம் நவநீத கர த்வயம்
த்யாயேத் ப்ரஸன்ன வதனம் பக்தாபீஷ்ட பலப்ரதம்.
க1ல்யாண லக்ஷண யுதம் த்1ரிபங்க3ம் ஸிம்ஹவிஷ்டரே
தி1ஷ்டந்தம் ருக்மிணீம் ஸத்யபா3மப்3யாஞ்ச நிஷேவிதம்
ஸமஸ்த்த ப1லதம் தே3வம் ஸ்ரீ ராஜகோபா1ல ஹரிம் பஜே.
ஏக1 வஸ்த்ராங்கி3தோ1 பா3ல: பர்ஹாபீடோ1ம்புஜானன:
கோ1பத3ண்ட த3ரோ மந்தண்ணு சா1ரயன் பசு மண்டலம்.
கோபி1காம்ஸ நிஹதை3க பா3ஹவே ஹேமவேத்1ர மித3ரேண பி3ப்ரதே1
ராஜகோபால வபுஷேந் நமோஸ்துதே சம்பகாட விநிவாஸினீ ஹரே
பு3க்திமுக்தி மகரந்த பூஜிதம் ப3க்த சித்த க1ள ஹம்ஸ ஸேவிதம்
கோ3பிலாதி முனி ப்ருங்க கூ3ஜித1ம் ஸ்ரீசம்பகேச பத3 பங்கஜம் ப3ஜே
ஸ்ரீ வாஸுதேவ பெருமாள் த்யானம்.
.வாஸுதேவம் சதுர்பாஹும் இந்த்ர நீல ஸம ப்ரபம்
ஸர்வாலங்க்கார ஸம்யுக்தம் சங்க சக்ர கதாதரம்
ததானம் தக்ஷிணே ஹஸ்த்தே ரம்யாம் அபய முத்ரிகாம்
ஸுவர்ண முகுடோ பேதம் மாமஹீ பரிஷேவிதம்.
ஸ்ரீ ஹேமப்ஜ நாயகி [செங்கமலத்தாயார்] த்யானம்
ஹேமாப்ஜ க1ல்ப லதி1கா1ம் ஸுர ஸேவ்யமானாம்
நாஸாக்3ர பாக3 விநிவேஸித ரத்1ன பூ3ஷாம்
வாசா1மகோ3ச1ர மஹாப்ரபு3 விஷ்ணு ஜாயாம்
த்3யாயாமி ஸிந்து3 த1னயாம் ஜகதா3ம் த4 ரித்ரீம்.
ராஜ ராஜ ஸுர ராஜ பத்மபூஹு
ராஜ சேகர முனீந்த்ர பூஜிதாம்
ராஜமான ரஜனீ கரானனாம்
ஸ்ரீ ராஜகோபால மஹிஷீம்
ஸ்ரீயம் ஆஸ்ரயாமி.
சம்பூ1ர்ண சந்த்ர வதனாம் ஸரஸீரு ஹாக்ஷீம்
ஸத் புத்ர பௌத்ர தன தான்ய ஸமர்த்தி தாயீம்
ஸ்ரீ பத்ம நாப பத பங்கஜ லோல ப்ருங்கீம்
வீர லக்ஷ்மீம் இமாம் த்யாயேத்
ஸர்வா பீஷ்ட ஸித்தயே .
சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம், நின்றால் மரவடியாம், நீள்கடலுள் என்றும் புணையாம், மணிவிளக்காம், பூம்பட்டாம், புல்கும் அணையாம் திருமாலுக்கு அரவு
வாழி திருநாமம்
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்
நீதியால் நல்ல பக்தர் வாழும் ஊர்
நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.
திருவாடிப் பூரத்துத் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே!